
பாலிவுட் நடிகர்கள் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் திருமணத்தின்போது மாடல் ஒருவர் கை மணிக்கட்டை அறுத்துப் பிரச்சினையில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் பலரும் அறியாதது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவருக்கும், உலக அழகி பட்டம் பெற்றவரும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007-ம் ஆண்டு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
அப்போது, நடிகையும், மாடலுமான ஜான்வி கபூர் என்பவர் (ஸ்ரீதேவியின் மகள் அல்ல) திருமண மண்டபத்தில் ரகளை செய்தார். அவர் தன்னுடைய கையில் மணிக்கட்டை அறுத்துக் கொண்டு, அபிஷேக் பச்சனின் மனைவியெனக் கலாட்டா செய்தார்.
இந்தச் சம்பவத்துடன் நிற்காமல், பொதுவெளியில் அனைவரின் முன்னிலையிலும் தற்கொலை செய்துகொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அபிஷேக் பச்சனை தன்னிடமிருந்து அமிதாப் பச்சன் பிரித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
கடந்த 2005-ம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ‘dus’ படத்தில் அபிஷேக்குடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் ஜான்வி கபூர்.
அபிஷேக் பச்சன் நண்பர்கள் முன்னிலையில் தன்னை திருமணம் செய்துகொண்டதாக அப்போது அவர் தெரிவித்திருந்தார். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் எங்கே சென்றார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அதன்பிறகு அவர் பொதுவெளியில் தலைகாட்டவில்லை.
