மதுரை அருகே லாரி மீது கார் மோதி விபத்து!

Advertisements

மேலூர்:

சென்னையை சேர்ந்தவர் தொழிலதிபர் முத்துக்குமார். இவர் தனது மகன், மனைவி மற்றும் உறவினர்கள் 5 பேருடன் தூத்துக்குடி அருகேயுள்ள முருகன்காடு கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டார்.

காரைச் சென்னையை சேர்ந்த ராமஜெயம் என்பவர் ஓட்டி வந்தார். அவர்கள் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரியைக் கார் டிரைவர் ராமஜெயம் முந்திச் செல்ல முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தது.

மேலும் இடது புறம் முன் இருக்கையில் அமர்ந்து வந்த முத்துக்குமாரின் மகன் பரத் பிரசன்னா (வயது 18) இடி பாடுகளுக்குள் சிக்கி காருக்கு உள்ளேயே பிணமானார்.

மேலும் பின்புறத்தில் அமர்ந்து வந்த முத்துக்குமார், அவரது மனைவி, உறவினர்கள், டிரைவர் உள்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தைப் பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்து படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியவர்களை மீட்டு மதுரை, மேலூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் பலியான பரத் பிரசன்னா உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்துகுறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *