
மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
நாளை அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆகஸ்டு நான்காம் நாள் கடலூர், கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.



