Chennai : அமித்ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடக்கம்.!

Advertisements
சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது.
சென்னை மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தில்லியில் இருந்து நேற்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 9 மணி அளவில் சென்னைக்கு வந்தடைந்தார்.
தொடர்ந்து, இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு மற்றும் தென் மண்டல குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தென் மண்டல குழுவின் தலைவராக அமித்ஷாவும், துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய்யும் உள்ளனர்.
மாநாட்டில் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், நீர் பங்கீடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.இதில் கேரளம் முதலமைச்சர் சதீசன், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *