திருப்பத்தூர் இரட்டைக் கொலையில் பகீர்.. பள்ளிக் காதலன், தம்பியுடன் தகாத உறவு.!

திருப்பத்தூர் அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணும் ஆணும் கொலை செய்யப்பட்ட இரட்டை கொலைநிகழ்வில், பள்ளிப் பருவ காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கோண காதலின் மோதல் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்…

திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அருகே உள்ள தனியார்  காலி மனைப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர், அங்கு கார் ஒன்று நீண்ட நேரமாக நிற்பதைக் கண்டு, அங்குபோய் காருக்குள் எட்டிப்பார்த்தவர் அலறியடித்துள்ளார். காரணம், காருக்குள் ஒரு ஆணும், பெண்ணும் ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளனர்.

தொடர்ந்து மூதாட்டி அக்கம்பக்கத்தினரிடம், கூறியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவித்துவிட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண், திப்பசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவியின் மனைவி 31 வயது மாலினி என்பதும், அந்த ஆண் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பாச்சல் பகுதியைச் சேர்ந்த 29 வயது ரஞ்சித் என்பதும் தெரியவந்தது.

ரஞ்சித், மாலினிக்கு தம்பி உறவுமுறையாவார். இருவரும் ஒரே இடத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததால், இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தியதில், தகாத உறவுத் தகராறில் கொலை நடந்திருப்பதையும் கொலை செய்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சஞ்சீவ்  காந்தி என்பவரையும் கைது செய்து விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலைசெய்யப்பட்ட மாலினி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவராவார். இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவருக்கும் சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இவர்களுக்கு ஒரு  மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாலினிக்கும்  அவர்து பள்ளிப் பருவக் காதலரான சஞ்சீவி காந்திக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டு, திருமணத்தை மீறிய பந்தத்தில் அவர்கள் இருந்துள்ளனர். இது கணவர் சிரஞ்சீவிக்கு தெரியவந்து அவர் கண்டித்தபோதும், மாலினி  அலட்சியப்படுத்தியதால், அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மலருக்கு மலர் தாவும் வண்டு போல, கணவரை விட்டுப் பள்ளிப்பருவ காதலருடன் தகாத உறவில் இருந்த மாலினி, அடுத்ததாக அவரது தம்பி உறவு முறையான கார் ஓட்டுநர் ரஞ்சித்திடம் நெருக்கம் காட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத ரஞ்சித்குமாரும், மாலினியிடம் நெருக்கம் காட்டியதோடு, தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த புதுசகவாசத்தில் திளைத்த  மாலினி, சஞ்சீவ்காந்தியை தவிர்த்ததோடு, அவரது செல்போன் அழைப்பையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ருசிகண்ட பூனையான சஞ்சீவ் காந்தி,  ரஞ்சித்தை செல்போனில் எச்சரித்தும் அவரும் கேட்கவில்லையாம். இதையடுத்து ரஞ்சித்குமாரையும், மாலினியையும் அவர் நோட்டமிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் சென்ற ரஞ்சித்குமாரை, சஞ்சீவ்காந்தி பைக்கில் பின் தொடர்ந்து சென்றுள்ளார். திருப்பத்தூரில் மாலினியை காரில் ஏற்றி தோரணம்பதி பகுதிக்கு ரஞ்சித்குமார் அழைத்து சென்று காருக்குள் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சஞ்சீவ்காந்தி, இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மாலினியின் கணவரிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்தபோது, அவர் சஞ்சீவ் குமாருக்கும் மாலினிக்குமான தகாத உறவைச் சொல்லவே, போலீசார் சஞ்சீவ்குமாரைப் பிடித்து விசாரித்ததில் இந்த உண்மைகள் வெளியாகி உள்ளன.தற்போது போலீசார் சஞ்சீவ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தகாத உறவு என்ன நிலைக்கு கொண்டு செல்லும் என்பதே இந்த இரட்டைக் கொலை சம்பவம் நமக்கு உணர்த்தும் பாடம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *