Puducherry: குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு!

Advertisements

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் 7 கோடியே 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை முதல்வர் ரங்கசாமி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட விஸ்வநாதன் நகர் பகுதியில் பல ஆண்டுகளாகத் தடைபட்டு இருந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணியை முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  பிரகாஷ் குமார்  பதவியேற்றவுடன் மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக மேற்படி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியை முடிக்க உத்தரவிட்டார்.

அதன்படி தற்போது மேற்படி விஸ்வநாதன் நகர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நமது மாண்புமிகு முதல்வர் N ரங்கசாமி திருகரங்களால் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்  லட்சுமி நாராயணன் தலைமையில் நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் முன்னிலையில் இன்று திறப்பு விழா கண்டுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்தக் குடிநீர்மேல்நிலைத் தேக்க தொட்டி சிறப்பு அம்சங்கள் பெருகிவரும் மக்கள் தொகை அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் குடிநீர் தேவை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு அடுத்த 30 ஆண்டுகளுக்குக் கீழ் குறிப்பிட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் இருக்கும் நோக்கில் வடிவமைக்க அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்தக் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏழு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியாகும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து விஸ்வநாதன் நகர் அனைத்து பகுதிகளும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெபேசன்  பேட்  செயினட் சீமான் பேட்  மாணிக்க முதலியார் தோட்டம் லூர்து நகர் லெனின் நகர் மற்றும் ஏழை மாரியம்மன் கோவில் பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் கருவடிக்குப்பம் சாலை பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் சாலை மாரியம்மன் கோவில் பகுதியைச் சுற்றி உள்ள குடியிருப்புகள் ஆக மொத்தம் ஏறக்குறைய 15 ஆயிரத்து 368 குடியிருப்புப் பொதுமக்கள் இதன் மூலம் பயன்படுவர்.

மேலும் இந்தக் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி இரண்டடுக்கு கொண்ட தொட்டியாகும் இங்கு நீர் உந்தும் முதன்மை குழாய்கள் நீர் பங்கிட்டுக் குழாய்கள் அனைத்து வீட்டுகளுக்கும் புதிய குடிநீர் இணைப்புகள் மோட்டார் பம்பு செட்டுகள் ஜெனரேட்டர் மற்றும் புதிய குடிநீர் இணைப்புக்காகத் தோண்டப்பட்ட சாலைகளைப் புதுப்பித்தல் ஆக மொத்தம் இந்தப் விஸ்வநாதன் நகர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏறக்குறைய 7 கோடியே 14 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணி தற்பொழுது  முடிக்கப்பட்டுள்ளது  இதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் உரிய அழுத்தத்துடன் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மேற்கூறிய பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலர் கேசவன் IAS அவர்களும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்  வீரச்செல்வம் அவர்களும் கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் அவர்களும் செயற்பொறியாளர்  உமாபதி அவர்களும் உதவி பொறியாளர்  பீனா ராணி அவர்களும் இளநிலைப் பொறியாளர்  சேகர் அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களும் விஸ்வநாதன் நகர் நலவாழ்வு சங்க உறுப்பினர்களும் மற்றும் அனைத்து பகுதி பஞ்சாயத்து பெருமக்களும் ஊர் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *