
மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் பாராமதியில் தீப்பற்றி எரிந்ததில், அவர் உட்பட அந்த விமானத்தில் சென்ற ஐந்து பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் அஜித் பவார் இன்று மும்பையில் இருந்து பாராமதிக்குத் தனி விமானத்தில் சென்றார். அந்த விமானம் காலை எட்டே முக்கால் மணிக்கு பாராமதியில் தரையிறங்கியபோது கோளாறாகித் தீப்பிடித்தது.
தகலறிந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கூடானது. இந்த விபத்தில் அஜித் பவார், அவருடன் வந்த உதவியாளர்கள் இருவர், விமானிகள் இருவர் என மொத்தம் ஐந்து ஐந்து பேரும் உயிரிழந்ததாக விமானப் போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.
அஜித் பவார் இறந்த தகவல் அறிந்ததும் சரத் பவார், அவர் மனைவி பிரதீபா ஆகியோர் மும்பையில் இருந்து பாராமதிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அஜித் பவாரின் உடல் வைக்கப்பட்டுள்ள பாராமதி அரசு மருத்துவமனை முன் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
அஜித் பவாரின் மறைவுச் செய்தியை அறிந்த அவர் கட்சியைச் சார்ந்த அமைச்சர் பாபாசாகிப் பாட்டீல், விக்ரம் காளே ஆகியோர் வாய்விட்டுக் கதறி அழுதனர்.


