Perungalathur: சாலை ஓரமாகக் கிடந்த குட்டி முதலை!

Advertisements

பெருங்களத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாகக் குட்டி முதலை ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது உடனடியாகச் சென்ற வனத் துறையினர் சாலை ஓரம் இருந்த முதலையை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

தமிழகத்தில் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாகப் பல்வேறு இடங்களில் தண்ணீர் காடானது.அப்போது பல்வேறு ஏரிகள், குளங்கள் நிரம்பியதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டன,

மேலும் பல இடங்களில் இந்த மழை தண்ணீரில் முதலைகள் அடித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே முதலைகைள் பிடிபட்டுவருகிறது. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகப் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்து வந்த 6 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் பிடித்துக் கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் விட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு பெருங்களத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாகக் குட்டி முதலை ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது உடனடியாகச் சென்ற வனத் துறையினர் சாலை ஓரம் இருந்த முதலையை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *