
சென்னையில் புத்தகக் காட்சி நாளை தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47வது புத்தக கண்காட்சியை நடத்துகிறது.
சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த புத்தகக் காட்சியில் சுமாா் 1,000 அரங்குகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் காட்சியை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை புத்தகக் காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் 47-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து விருதுகளை வழங்குவார் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.கே.முருகன் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 21 ஆம் தேதி வரை கண்காட்சியில் இக்கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இடவசதி இல்லாததால், ஸ்டால்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது கடினம். இருப்பினும், சங்கம் இதை மாநில அரசிடம் தெரிவித்திருந்தது. வரும் ஆண்டுகளில், கண்காட்சியில், அதிக ஸ்டால்கள் அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

