சிவந்தி ஆதித்தனாரின் 90ஆவது பிறந்த நாள் விழா.!

Advertisements

சிவந்தி ஆதித்தனாரின் 90ஆவது பிறந்த நாள் விழாவையொட்டிச் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு அவரது குடும்பத்தினரும் அரசியல் கட்சித் தலைவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி’ குழுமத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவுப் பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

‘தினத்தந்தி’ குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் அவரது மனைவி சம்யுக்தா, தந்தி தொலைக்காட்சி இயக்குநர் ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதா குமரன், ஜெயந்தி அம்மாள் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினர்.

தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் சிவந்தி ஆதித்தன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பேசிய அவர் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் சிவந்தி ஆதித்தன் எனத் தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பேசிய அவர், அரசு நிதி உதவி அளிக்க மறுத்த நிலையில் தனது சொந்தச் செலவில் இந்திய கைப்பந்து அணியை உலககோப்பை போட்டிகளுக்கு அனுப்பி வைத்தவர் சிவந்தி ஆதித்தன் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *