ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் திரும்பப் பெறும் – டிரம்ப் நம்பிக்கை.!

Advertisements

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகள் அனைத்தையும் உக்ரைன் திரும்பப் பெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் ட்ரூத் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், போர் தொடங்கும்போது உக்ரைனின் எல்லை எப்படி இருந்ததோ அதேபோல இழந்த பகுதிகள் அனைத்தையும் அது திரும்பப் பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக ஐரோப்பிய நாடுகளும், நேட்டோவும் ரஷ்ய பொருளாதாரத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் டொனால்டு டிரம்ப் உரையாற்றினார். அதன்பின் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியுடன் பேச்சு நடத்திய பின் ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து ரஷ்யா கைப்பற்றிக்கொண்ட கிரிமியா பற்றி இதில் டிரம்ப் குறிப்பிடவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *