ஆர்பி உதயகுமார் ராஜேந்திர பாலாஜி சண்டை: அதிமுகவில் அடுத்த உள்குத்து 

Advertisements
சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி அதிமுகவில் ஆங்காங்கே போதல்கள் வெடிக்க ஆரம்பித்து உள்ளன.  அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜிக்கும் ஆர் பி உதயகுமாருக்கும் உச்சகட்ட மோதல் ஆரம்பித்து இருக்கிறது . கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி வெற்றி பெற்று மாவட்ட செயலாளர் அமைச்சர் என்று பதவிகளைப் பெற்ற நிலையில் தற்பொழுது அந்தத் தொகுதி முழுவதும் கோலோச்சி வருகிறார் .
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்நகர செயலாளராக இருக்கும் இன்பத்தமிழன் மூலமாக ஆர்பி  உதயகுமாருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே புதிய  மோதல் வெடித்துள்ளது . கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த இன்பத்தமிழன்  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளராக பணியாற்றி வந்தார்
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டம் ஒன்றில் இன்பத் தமிழன் ராஜேந்திர பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றங்களை கூறினார் ராஜேந்திர பாலாஜி தொகுதியில் எந்த வேலையும் செய்யவில்லை என அவர் கூறினார்  இதனால் இன்பத் தமிழனுக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது
இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளர் பதவியில் இருந்து இன்பத்தமிழனை ராஜேந்திர பாலாஜி கட்டம் கட்டி தூக்கி விட்டார் . ராஜேந்திர பாலாஜியால் தனது பதவி பறிபோன இன்பத் தமிழன் நேராக ஆர்பி உதயகுமாரிடம் சென்று நடைபெற்ற சம்பவங்களை எடுத்து கூறினார்
இதனைத் தொடர்ந்து ஆர்பி உதயகுமார் எடப்பாடி பழனிச்சாமி இடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்பொழுது இன்பத் தமிழனுக்கு ஜெயலலிதா பேரவையின் மாநில இணை செயலாளர் பதவி வாங்கி கொடுத்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதல் பேரிலேயே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது
ஏற்கனவே ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக ஆர்பி உதயகுமார் இருப்பதால் இன்பத்தமிழனுக்கு மிக எளிதாக இணைச் செயலாளரின் பதவியை வாங்கி கொடுத்து விட்டார் . இதன் மூலம் ராஜேந்திர பாலாஜிக்கும் ஆர்பி உதயகுமாருக்கும் இடையே மறைமுக மோதல் உருவெடுத்துள்ளது
ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி வைகை செல்வன் இன்பத்தமிழன் மாபா பாண்டியராஜன் உள்ளிட்ட பல பேரிடம் மோதல் போக்கை கடைபிடித்து வந்தநிலையில் இப்பொழுது ஆர்பி உதயகுமாருடனும் மோத ஆரம்பித்திருக்கிறார் . இதன் மூலம் அதிமுகவில் குறிப்பாக விருதுநகர் பகுதியில் புதிய உள்குத்து வேலைகள் தொடங்கி இருக்கின்றன என்று பரபரப்பாக பேசப்படுகிறது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *