
ஆலமரம் அதிமுகவை அடியோடு வெட்டி எறிய நினைத்து பொதுமக்களால் நம்பிக்கை தூரோகிகள் என்று பட்டம் குத்தப்பட்ட எத்தனையோ பேர் இன்று தவெகவுக்கு தாவிட்டு விஜய் அவர்களின் காலில் பொறுப்பு கேட்டு காலில் விழாத குறையாக தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஒரு அதிமுக தொண்டன் தவெகவுக்க தாவுனாரா என்பதை நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.
ஆளுமை அம்மா ஆண்ட கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்தினை பிடித்த நிலையில், அக்கட்சியை சார்ந்த பலரும் விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக தற்போது அவர் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அதிமுகவில் இருந்து பலரும் கட்சியில் இருந்து விலகி ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெக பக்கமாக சென்று வருகின்றனர். இது அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரான ராஜேந்திர பாலாஜி கட்சியில் இருந்து விலக போவதாக சமீப காலமாகவே செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் விவாத பொருளாக மாறியுள்ளது. விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி, தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக எடப்பாடி பழனிசாமியின் திவிர ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். இப்படியான நிலையில் ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் விலகி, திமுகவில் இணையவிருப்பதாக சமீப காலமாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி தற்போது விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். அதாவது திமுகவில் இணைய போவதாக வெளியான செய்தி 100% பொய்யானது என திட்டவட்டமாக மறுத்துள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் வளர்ந்தது அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வியர்வையால். கடைசி வரைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசமான தொண்டனாக இந்தக் கட்சியில் தான் நான் பயணிப்பேன்.
என்னை அரசியலில் நேரடியாக எதிர்க்க முடியாமல், இதுபோன்ற செய்திகளை பரப்புகின்றனர் என விளக்கம் அளித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி. மேலும் தவெகவில் பதவி சுகத்துக்காக இணைந்தவர்கள் சிலரை வைத்துக்கொண்டு வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராமில் இப்படியான செய்தியை பரப்பி கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மன மகிழ்ச்சிக்காக இதுபோன்ற செய்திகளை பரப்பி கொள்ளட்டும் என்றார்.
அதோடு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைபவர்கள் குறித்து சில காட்டமான விமர்சனங்களை ராஜேந்திர பாலாஜி முன்வைத்துள்ளார். அதாவது ஒரு சிலரை ஆசை வார்த்தை காட்டி அதிமுகவில் இருந்து தவெகவில் இணைத்து வருகின்றனர். அந்த கட்சியில் தவெக ஆட்சிக்கு வர வேண்டுமென உழைத்த பலர் உள்ளனர். அவர்களுக்கு பொறுப்பினை கொடுக்கலாம். ஆனால் 32 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அதிமுகவில் இருப்பவர்கள் ஆசைக்காட்டி கட்சியில் இணைத்து வருகின்றனர்.
இதன் காரணமாக தவெக மீது அதிமுக தொண்டர்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக அதிமுகவுடைய ஆணி வேறாக கடைசி காலம் வரைக்கும் இருப்பேன். என்னை யாரும் எளிதில் புடுங்கி எரிய முடியாது. எடப்பாடி பழனிசாமியின் படைத் தலைவர்களில் ஒருவனாகவும் இருப்பேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்து திமுகவில் இணைய போவதாக வெளியான தகவல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கே.டி. ராஜேந்திரபாலாஜி. இந்த செய்தி எடப்பாடி அவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்திருக்கிறது.
இதற்கிடையில் நேற்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்பாக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தவெக பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்த்தனர். இபிஎஸ்ஸுடன் தொடர்ந்து மோதல் போக்கினை கடைப்பிடித்து வரும் இவர்கள் என். ஆனந்தை சந்தித்தது மிகப்பெரிய அளவில் கவனம் ஈரத்தது.
ஒருவேளை இவர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார்கள் என்று அரசியல் சாணக்கியர்கள் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். ஆனால் எஸ்.பி. வேலுமணி தொகுதி கோரிக்கை சம்பந்தமாகவே அமைச்சரை சந்தித்தோம். அதிமுக எங்களுடைய கட்சி என தெரிவித்திருந்தார்


