லாட்டரி விவகாரத்தில் ஸ்டாலின் மீது ஆதவ் அர்ஜுனா அதிரடி.!

Advertisements

லாட்டரி அதிபரிடம் மு.க.ஸ்டாலின் ரூபாய் 900 கோடி ஏன் வாங்கினார் என்பது குறித்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – உதயநிதி இடையே சட்டப்பேரவையில், காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டசபையில் இன்று  நடைபெற்ற, பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது,  அமைச்சர் ஆதவ்அர்ஜுனா பேசினார்.

அப்போது, மது விலக்கு கொள்கை என்பது எங்களுடைய கொள்கை, போதையில்லா தமிழகம் எங்களுடைய கொள்கை, ஆட்சிக்கு வந்த பின்பும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், இங்கு இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் எந்த தொழிலிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது என்றும், தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பனர் ஜெகத்ரட்சகன் சாராய ஆலை நடத்துகிறாரா இல்லையா என்றும், சாராய ஆலை நடத்தி கொண்டு, டாஸ்மாக் நிறுவனம் மூலம் ஆர்டர் வந்ததை யார் வாங்கியது என்றும் கேள்வி எழுப்பிய அவர், தி.மு.க.வில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாராய ஆலை நடத்துகிறார்கள் என்றும் திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறார். திமுகவின் ஐடி அமைச்சர் சாராய ஆலை நடத்துகிறார். இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும், என்றும் அமைச்சர் ஆதவ்-அர்ஜுனா தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லாட்டரி குறித்து பேசினர்.

இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, லாட்டரி என கூறுகிறார்கள், லாட்டரி நிறுவனத்திடம் மு.க. ஸ்டாலின் ரூபாய் 900 கோடி வாங்கியது ஏன், தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள் என்றும், நான் எந்த தொழிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தவில்லை என்றும் ஆதவ்அர்ஜுனா தெரிவித்தார்.  இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உடனே பதில் கொடுத்தார்.

அப்போது, திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதனை கொடுத்தது அவருடைய மாமனார்தான். ஏன் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜனா, அவர் அப்பாவிற்கு மட்டும் தான் தெரியும். அது அவர் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *