TMB: கார் ஓட்நர்ருக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கிய வங்கி!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்நர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் நடைபெற்றுள்ளது…

கடந்த 9-ந்தேதி திடீரென அவரது வங்கிக் கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதான செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பல ஜீரோக்கள் இருந்ததால், தனது வங்கி கணக்கில் 15 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், இது மோசடி வேலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் தனது நண்பருக்கு 15 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.

அது அவரது வங்கி கணக்கிலிருந்து டெபிட் ஆகியுள்ளது. இதனால் வங்கிக் கணக்கில் பணம் உள்ளது உண்மைதானென உறுதி செய்து கொண்ட ராஜ்குமார், மேலும் பணத்தை நண்பருக்கு அனுப்ப முயன்றுள்ளார். அதற்குள் தவறை கண்டுபிடித்துச் சுதாரித்துக்கொண்ட தனியார் வங்கி, உடனடியாகப் பணத்தை திருப்பி எடுத்துக் கொண்டது.

அதன்பின், தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று வங்கியிலிருந்து பேசிய அதிகாரிகள், பின்னர் மிரட்டும் தோனியில் பேசியதாகத் தெரிகிறது. அதன்பின், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு அழைத்துச் சென்று வழக்கறிஞர் முன்னிலையில், தவறுதலாக உங்கள் வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்துவிட்டோம்.

நீங்கள் செலவு செய்துள்ள பணத்தை திருப்பித் தர வேண்டாம். அதற்காக வாகன கடனாகப் பெற்றுக்கொள்ளலாமெனச் சமரசம் பேசியுள்ளனர். இத்துடன் இந்த விவகாரத்தை முடித்துக் கொள்வோம் என்று வங்கி கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *