Republic Day 2024: ஜோப்பைடனுக்கு அழைப்பு!

Advertisements

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு நாள் விழாவில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோப்பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்…

குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக வெளிநாட்டுத் தலைவரை அழைப்பது நடைமுறை. இது இந்தியாவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு அளிக்கும் கௌரவம் ஆகும் .2024 ஜனவரியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோப்பிடனை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார் என்று அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

பிடென் அழைப்பை ஏற்றுக்கொண்டால், 2015 இல் அழைக்கப்பட்ட பராக் ஒபாமாவிற்குப் பிறகு, குடியரசு தின விழாவில் பங்கேற்கும் இரண்டாவது அமெரிக்க அதிபராக அவர் இருப்பார். இந்த மாத தொடக்கத்தில் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிடன் அதிபரான பிறகு இந்தியாவிற்கு தனது முதல் பணத்தை மேற்கொண்டார்.

கோவிட்-19 பரவல் காரணமாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் குடியரசு தின விழாவுக்குத் தலைமை விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை. பிடனுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் விரைவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *