Thiruvallur: ரயில் மோதி 70 வயது மூதாட்டி உயிரிழப்பு!

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 70 வயது அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு.

சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார் போது சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற அதிவிரைவு ரயில் மூதாட்டியின் மீது மோதியது இதில் மூதாட்டி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி யார் என்பதை குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *