60 எம்எல்ஏக்கள் , 13 அமைச்சர்களுக்கு சீட் இல்லை : ஸ்டாலின் அதிரடி..!

Advertisements
தற்போதைய திமுக ஆட்சியில் பணியாற்றி வரும் 60 எம்எல்ஏக்கள் மற்றும் 13 அமைச்சர்களுக்கு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சீட்  இல்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்.
மு க ஸ்டாலின் தலைமையிலான திமுகவை பொருத்தவரையில் தேர்தல் பணிகள் தொடர்பாக மூன்று உளவுத்துறை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர தமிழக அரசு சார்பிலும் உளவுத்துறையினர் அந்தந்த பகுதிகளில் உள்ள நிலவரங்கள் குறித்து திமுக தலைமை இடத்திற்கு தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த உளவுத்துறைகள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் திமுக மேலிடம் தக்க முடிவுகள் எடுத்து வருகிறது . தேர்தல் வியூகங்கள் குறித்து ஒரு அமைப்பும் தொகுதி  நிலவரங்களை ஆராய்ந்து சொல்வதற்கு ஒரு அமைப்பும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை முன்னெடுக்க ஒரு அமைப்பும் ஆகியவை இதில் அடங்கும் .
இதற்கென சென்னை அண்ணாசாலையில் தனியாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் பாரபட்சமில்லாமல் தங்களது ஆய்வு முடிவுகளை திமுக மேல் இடத்துக்கு தெரிவித்து வருகிறார்கள். மு க ஸ்டாலினை பொருத்தவரையில் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியை மிக கடினமான முறையில் எதிர்கொண்டு இருக்கிறார். தமிழக நிதிநிலைமை பற்றாக்குறை ஒரு பக்கம் மத்திய அரசின் நிதி உதவி இல்லாதது ஒரு பக்கம். வருகிற தேர்தலில் புதிதாக கூட்டணிகள் தோன்றுவது ஒரு பக்கம் அமலாக்கத்துறை  சோதனைகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் என எல்லாவற்றையும் தாண்டி செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 133 தொகுதிகளை பெற்ற திமுக இந்த தேர்தலில் இருநூறு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது . இதற்கிடையே மு க ஸ்டாலினால் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி குழு அமைப்புகள் பல்வேறு தகவல்களை மேலிடத்திற்கு தெரிவித்துள்ளன .
அதில் தற்போதைய அமைச்சர்கள் எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் தனிப்பட்ட செல்வாக்கு சாதி ரீதியிலான ஓட்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அலசி ஆராயப்பட்டுள்ளன. இதன்படி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு வருகிற தேர்தலில் சீட்டு இல்லை என்பது முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் இரண்டு முறை வெற்றி பெற்ற பல எம்எல்ஏக்களின் செல்வாக்கு தொகுதியில் சரிந்து உள்ளதாக சர்வே ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
எனவே இரண்டு முறை வெற்றி பெற்ற பல எம்எல்ஏக்களின் தொகுதிகள் பறிபோகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் 60 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வருகிற தேர்தலில் சீட்டு இல்லை என தெரிய வந்திருக்கிறது . இதே போல் 13 துறைகளின் அமைச்சர்கள் சரியாக பணி செய்யவில்லை மக்கள் மத்தியில் செல்வாக்கையும் இழந்திருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் 13 அமைச்சர்களுக்கு மீண்டும் தொகுதி தரப்பட மாட்டாது என தெரிகிறது . இதில் டெல்டா பகுதியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் அடங்குவார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்திருக்கிறது .வருகிற சட்டமன்றத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பு தரலாம் என்றும் திமுக மேலிடம் முடிவெடுத்திருக்கிறது .
அந்த வகையில் பல எம்எல்ஏக்களின் வாரிசுகள் மற்றும் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு இந்த முறை சீட் வழங்கப்படுகிறது .
இதேபோல் பல மாவட்ட செயலாளர்களுக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன . வேட்பாளர் தேர்வில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற முடியும் என உளவுத்துறை அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன .
எனவே நடைமுறையில் சரியாக பணி செய்யாத எம்எல்ஏக்களுக்கு கட்டாயம் சீட் இல்லை என்பது உறுதியாக இருக்கிறது இது தவிர சாதி ரீதியாக செல்வாக்கு பெற்ற பிரபலங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யவும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது .இது தவிர இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யும் 40 வேட்பாளர்களுக்கு தொகுதி ஒதுக்கி தருவது என்றும் திமுக மேலிடம் முடிவெடுத்திருக்கிறது .
தற்பொழுது தலா ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக ஆலோசனை குழு இறங்கி இருக்கிறது இது தவிர விருப்ப மனு தரும் பொழுது அதனையும் பரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .
எனவே , இந்த முறை திமுகவில் வேட்பாளர் தேர்வு மிக கடுமையாக இருக்கும் என தெரிகிறது. இது தவிர கட்சி மேலிடத்திலிருந்து 15 கோடி ரூபாயும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 10 கோடியும் செலவு செய்யும் வகையில் தேர்தல் வியூகம் அமைக்கப்பட்டிருக்கிறது ,
அந்த வகையில் 10 கோடி ரூபாய் செலவு செய்ய தகுதியானவர்கள் மட்டுமே திமுகவில் சீட் பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. இதன் அடிப்படையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் வகையில் புதிய அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
இதேபோல் அதிமுக தரப்பிலும் வேட்பாளர் தேர்வுகள் இப்பொழுதே தொடங்கி விட்டன. அதிமுகவிலும் 10 கோடி ரூபாய் அளவில் செலவு செய்யும் ஒருவருக்கு தான் தொகுதி ஒதுக்கி தர முடியும் என்ற நிலைமை இருக்கிறது . இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் சார்பிலும் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது . ஆனால் 234 தொகுதிகளுக்கு தேவையான வேட்பாளர்கள் இல்லாமல் தமிழக வெற்றி கழகம் திண்டாட்டத்தில் இருக்கிறது.
இதுவரை அவர்கள் மிகுந்த போராட்டம் நடத்தியதன் விளைவாக 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள் . மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கிடைக்கவில்லை இதனால் என்ன செய்வது என்று புதிய திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறார்கள் .
இது தவிர தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிகப்பெரிய அளவில் செலவு செய்யும் தகுதி உள்ளவர்களாகவும் இல்லை. எனவே தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களுக்கு தேவையான பணத்தை தலைமையிடமே தருவது என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன .
இருந்த போதிலும் குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் செலவு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *