பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திலேயே, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்” எனச் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதே போன்று, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் காவல்துறையினரிடம் சரணடைந்தவர்கள் மீது நம்பிக்கை இல்லை. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திலேயே, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்” எனச் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆளும் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய இரண்டு கட்சிகளின் தலைவர்களே இப்படியொரு கருத்தைக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலையாளிகள் தொடர்பான உண்மைத்தன்மை தொடர்பாகப் பொதுவெளியிலும் பல்வேறு சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளன.
