Tiruvannamalai : 60-ஆயிரம் சிகரெட் பாக்கெட்டுக்கள் பறக்கும் படையினர் பறிமுதல்.!

Advertisements

செய்யாறு அடுத்த அப்துல்லாபுரம் சோதனை சாவடியில், உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற, 84-ஆயிரத்து 700 ரூபாயையும், 60-ஆயிரம் சிகரெட் பாக்கெட்டுக்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அப்துல்லாபுரம் சோதனை சாவடி அருகே, தேர்தல் உதவி அலுவலர் ஜீவா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள கிளப்பிற்கு,  சிகரெட் பாக்கெட்டுகளை சப்ளை செய்வதற்கு, சென்னையிலிருந்து பெங்களுருக்கு, பெங்களூர் காடுகோடி பகுதியைச் சேர்ந்த சதீஷ்-யாடியா என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற, 84-ஆயிரத்து 700 ரூபாய்,  மற்றும் 60-ஆயிரம் சிகரெட் பாக்கெட்டுக்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர். செய்யாறு சார் ஆட்சியரும்,  தேர்தல் நடத்தும் அலுவலருமான அம்பிகா ஜெயினிடம் ஒப்படைத்தனர், ஆய்வின் போது, வட்டாட்சியர்கள், தேர்தல் உதவி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்,

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *