திமுக 20 கட்சிகள் கூட்டணி வைத்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் : விஜயபாஸ்கர்

திமுக சார்பில் 20 கட்சிகள் கூட்டணி வைத்தாலும், எவ்வளவு பணம் செலவழித்தாலும், எவ்வளவு வியூகங்கள் வகுத்தாலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்துப் புதுக்கோட்டையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக எவ்வளவு பணம் செலவழித்தாலும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் வெற்றிபெறும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *