கரூர் இறப்புக்கு செந்தில் பாலாஜிதான் காரணமா.? – சிபிஐ சொல்வது என்ன..?

Advertisements

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக, தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம்  ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேற்று சிபிஐ விசாரணை நடைபெற்றது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி,  19-ஆம் தேதி,  மார்ச் 15-ஆம் தேதி ஆகிய தேதிகளில், சி.பி.ஐ. அனுப்பிய அழைப்பாணையின்படி,  டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில், விஜய் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். சிபிஐ தரப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

விஜய்யிடம் நேற்று விசாரணை நடத்திய நிலையில்,  தற்போது கரூர் தொகுதிக்குட்பட்ட செந்தில் பாலாஜியிடம், சிபிஐ விசாரணை நடத்தியது. தொடர்ந்து 6 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இன்றைய விசாரணை மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்றது. சி.பி.ஐ. அலுவலகத்தில் நாளை மீண்டும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *