Shoba Chandrasekar:பெண்ணியம் காப்பாற்று… புரட்சிகர திட்டங்கள் தீட்டு… வானில் பறக்கும் உன் கொடி!

Advertisements

சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார்.

சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தொண்டர்களின் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம் என்று கூறினார்.

இந்த நிலையில் விஜய்க்கு அவருடைய அம்மா ஷோபா வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில்,
‘இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய். நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று.

பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (celebrity mother). இனி நானும் ஒரு PM (proud mother)’ என கூறி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *