43 Children’s Sexually Assaulted: 24 வருடங்கள் சிறை தண்டனை!

ஆஸ்திரேலியாவின் பிரபல சமையல்கலை வல்லுநர் பால் ஃபிராஸ்ட் 43 குழந்தைகளைப் பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்த குற்றத்திற்காக 24 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல சமையல்கலை நிபுணர் பால் தவுகஸ் ஃபிராஸ்ட்   நீச்சல்   வீரரும்   கூட.   அவர் நீச்சல் பயிற்சி பள்ளியில் நீச்சல் பயிற்சி  அளித்து வந்த நிலையில் 11 குழந்தைகளுக்குப் பாலியல் ரீதியாகக் கொடுமை படுத்தியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் வழக்கை விசாரணை சிட்னி டவுனிங் மைய நீதிமன்றத்தில்  கடந்த வியாழன் அன்று நடைபெற்றது.  அவர் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களுக்குப் பிறகு விசாரணை முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

48 வயதாகும் பால்  சிறிதும் இரக்கமின்றி 10 வயதுக்கு உட்பட்ட 43  பேரைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டு  முதலில்  32 வருடங்கள் அவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜுன் 14-ஆம் தேதி தான் செய்த குற்றத்திற்காக வருந்துவதாகவும்  குற்ற உணர்வில் இருப்பதாகவும், கூறினார்.

மேலும் 10 சிறுவர்களையும், சிறுமிகளையும் 1990 லிருந்து 2000 ஆம் ஆண்டுவரை தவறு இழைத்ததாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட   சிறுமியின்   வயது  10  என்றும் கூறியுள்ளார்.   பிறகு   32   வருடங்கள் 24 வருடங்களாகக் குறைக்கப்பட்டது. தவறுச் செய்தவருக்கு இது  சரியான தண்டனையாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *