
விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூரில் கணவரை ஏமாற்றிவிட்டு 20 சவரன் தங்க நகை மற்றும் 15 லட்சம் பணத்தை எடுத்துச் சென்று வேறொருவருடன் உல்லாசம் அனுபவிப்பதாக மனைவிக்குக் கணவர் அடித்து ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது…
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வெங்கடேசன் அவரது மனைவி விஜி என்வருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளன.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வெங்கடேசன் மனைவிக்கும் அதே பகுதியைச் சார்ந்த கன்னியப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசம் அனுபவிப்பது வெங்கடேசனுக்கு தெரியவரவே மனைவியைக் கண்டித்துள்ளார்.

ஆனால் வெங்கடேசன் மனைவி அவரது பேச்சைக் கேட்காமல் கன்னியப்பனுடன் சேர்ந்த்து தான் வாழுவேன் எனக் கூறியுள்ளார். இதனால் சண்டை ஏற்படவே இரண்டு நான்கு தினங்களுக்கு முன் வெங்கடேசனின் மனைவி விஜி 20 சவரன் தங்க நகை மற்றும் 15 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த கணவர் வெங்கடேசனை பழி வாங்க கோலியனூர் பகுதி முழுவதும் முக்கிய அறிவிப்பாக விஜி என்பவர் வெங்கடேசனை கல்யாணம் செய்து 25 வருடம் ஆகிய நிலையில் அனு அம்மு என்ற இரண்டு பெண் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் தன்னிடமிருந்து 20 சவரன் நகை 15 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கோலியனூர் கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள கன்னியப்பன் என்பவருடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதாகப் போஸ்டர் அடித்து ஒட்டிப் பழிவாங்கியுள்ளார்.
மேலும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போஸ்டரால் கோலியனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


