உலகமே போற்றும் பௌத்த அறிஞர் ராபர்ட் தர்மனுக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சி புகழாரம்..!

உலகளவில் பௌத்த சிந்தனைகளைப் பிரபலப்படுத்திய ராபர்ட் ஏ. எஃப். தர்மன், கலாச்சாரங்களுக்கு இடையே நீடித்த புரிந்துணர்வு பாலங்களையும் உருவாக்கியதாகப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ராபர்ட் ஏ. எஃப். தர்மனின் மறைவையொட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், பௌத்த மத அறிஞரும், சிறந்த பேராசிரியரும், இந்தியாவின் வாழ்நாள் நண்பருமான ராபர்ட் ஏ. எஃப். தர்மனின் மறைவு செய்திக் கேட்டு ஆழ்ந்த துயரமடைந்ததாகத் தெரிவித்தார்.

உலகளவில் பௌத்த சிந்தனைகளைப் பிரபலப்படுத்திய அவர், கலாச்சாரங்களுக்கு இடையே நீடித்த புரிந்துணர்வு பாலங்களையும் உருவாக்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் நகரில் அவரைச் சந்தித்ததையும், அங்கு தங்களுக்குள் நடந்த சிறந்த உரையாடலையும் நான் அன்போடு நினைவு கூர்வதாகக் கூறினார்.

இந்தத் துயரமான வேளையில் தனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுடன் இருக்கின்றன என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *