K. A. Sengottaiyan: ஆ.ராசாவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிப்போம்!

முன்னாள் முதல்வர் எம்ஜியார் குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.ராசாவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிப்போம் எனக் கோபியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள். அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகப் பேசினார்.

பட்டியலின மாணவிமீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடடைய பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை  எடுக்காத திமுக அரசைக் கண்டித்து கோபிசெட்டிபாளையத்தில்  அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் அதிமுக  நகர செயலாளர் ப்ரிணியோ கணேஷ் தலைமையில்   நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தி்ன் சிறப்பு அழைப்பாளராகக் கோபி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிபோது.

முன்னாள் முதலவர் குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.ராசாவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிப்போம் என்றும்  ஆ.ராசா பெயரை மாற்றிக்கொண்டு ஊரை விட்டு ஓடி வைப்போம் என்றும் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாடனத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி மற்றும்  ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம் குறிஞ்சிநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *