
ஈரான் அரசு தனது நாட்டில் இருந்து 15 இலட்சம் ஆப்கானியர்களை வெளியேற்றியுள்ளது. அவர்களில் சிலர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தபோது அங்கிருந்து இலட்சக்கணக்கானோர் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் புலம்பெயர்ந்தனர். அதைவிட அதிகமானோர் அண்டைநாடான ஈரானில் அடைக்கலம் புகுந்தனர்.
இந்நிலையில் ஈரானில் உள்ள ஆப்கான் அகதிகள் இஸ்ரேலுக்காக உளவு பார்ப்பதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஏழு மாதங்களில் 15 இலட்சம் ஆப்கானியர்கள் ஈரானை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒன்பது இலட்சத்து 18 ஆயிரம் பேர் ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தானில் மீண்டும் குடியேறியுள்ளதாகத் தாலிபான் அகதிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


