BJP-AIADMK Alliance: அண்ணாமலைக்கு சிக்கல்?

அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல்! அண்ணாமலைக்கு சிக்கல்…

அண்ணாமலையை மாற்ற வேண்டும் எனப் பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் நேரில் வலிவுறுத்தியுள்ளார். அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி என்று அதிமுக முடிவெடுத்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அதிமுக கோரிக்கையைப் பாஜக உதாசீனப்படுத்தியது.

தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணியைத் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் எனப் பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை பற்றிக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. பாஜகவால் இங்குக் காலூன்றவே முடியாது. எங்களவை வைத்துத் தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது அதுபற்றி முடிவெடுத்துக்கொள்ளலாம். எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்கள் முடிவு. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு எனக் கூறினார். இதனையடுத்து இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *