கத்தார் நாட்டில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு வழங்கி ஆறுதல் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த நவாஸ் என்பவர் கத்தார் நாட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். சாலை விபத்தில் உயிரிழந்த அவர் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்தத் தகவலை அறிந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கூறியதுடன் நவாஸ் குடும்பத்துக்கு 5 இலட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு நவாஸ் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார்.

