
பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாய கனவோ’ எனும் பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல நடிகர் விஜய் ஆண்டனி ‘நூறு சாமி’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சசி இயக்கத்தில் இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில், ஸ்வாசிகா, லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையடுத்து, ‘மாய கனவோ’ என்ற முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, வருகிற மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று இப்படம் திரைக்கு வர உள்ளதால் நடிகர் விஜய் ஆண்டனியின் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


