
கோவை: பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லையெனக் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்துத் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வாக்குசேகரித்தார். அப்போது பேசிய கனிமொழி; தேர்தலில் போட்டி திமுக-அதிமுக இடையேதான்.
பொய் செய்திகளை ஒரு குழுமூலம் பரப்பி, மத ரீதியான பிரச்னைகளைப் பாஜக ஏற்படுத்துகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேர்தல் என்பதே நடைபெறாது. மோடி அரசு, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையும் வஞ்சித்து வருகிறது. பாஜக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதற்கு மணிப்பூர் சம்பவமே உதாரணம். ஜிஎஸ்டி வந்தபிறகு 25 சதவீதம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
நிறுவனங்களை மிரட்டித் தேர்தல் பத்திரம்மூலம் நன்கொடை பெறுகிறது பாஜக. இபிஎஸ் முதலமைச்சரை விமர்சிக்கிறாரே தவிர பிரதமரைப் பற்றிப் பேசுவதே கிடையாது. மீண்டும் மோடியிடம் சென்று கைகட்டி நிற்க வேண்டும் என்பதால் இபிஎஸ் பாஜகவை விமர்சிக்கவில்லை இவ்வாறு கூறினார்.



