சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து வாரத் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.56,880-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,110-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

