
கேள்வி கேட்டவரை தர்ம அடிகொடுத்த தொண்டர்கள்!
உத்தரமேரூரில் நடைபெற்ற ‘திராவிட மாடல் அரசின் சாதனை’ விளக்கப் பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து திண்டுக்கல் லியோனி பேசியதால் கூட்டத்தில் இருந்தவர்கள் ஆத்திரமடைந்து கேள்வி எழுப்பியதால் திமுக- தொண்டர்களுடன் உத்தரமேரூர் போலீசார்கேள்வி எழுப்பியவர்களை தாக்குதல்நடத்திகூட்டத்திற்குவெ
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்- சட்ட மன்ற உறுப்பினர்- க.சுந்தர் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகளின் வாரியத் தலைவர்- பட்டி மன்ற நடுவர் -திண்டுக்கல்-ஐ.லியோனி, கூட்டத்தில் கலந்து கொண்டுபேசும்போது, திராவிட மாடல் என்பது
சாமானிய பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் சமத்துவம் வழங்குவது, அடுப்பு ஊதிய பெண்கள் இன்று கல்வி கற்பது திராவிட மாடல் அரசின் சாதனை என்று கூறினார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து தொடக்க கல்வி நிலையங்களிலும் காலைச் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவித்தார்.அரசு பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிட தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார் என்றும், எண்ணற்ற நல்ல திட்டங்களை வழங்கிவரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்- 40-க்கும் 40 -இடங்களை வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.அதற்குச் சாமானிய மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திண்டுக்கல் லியோனி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தாக்கிப் பேசியபோது, இருக்கையில் அமர்ந்திருந்த பொதுமக்கள் எடப்பாடி பழனிச்சாமி பற்றிப் பேசியதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர்
“இதனைக் கண்ட உத்தரமேரூர்திமுகதொண்டர்
இதனால் உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றதிராவிட மாடல் அரசின் பொதுக்கூட்ட மேடையில் பரபரப்பு நிலவியது.சிறிது நேரத்தில், கூட்டத்தை முடித்துக் கொண்டு திண்டுக்கல்- ஐ.லியோனி கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.




