ISRO: அடுத்த அதிரடிக்கு தயார்!

Advertisements

“சூரியனை ஆய்வு செய்ய விண்கலனை அனுப்பும் முதல் முயற்சியாக ஆதித்யா எல் 1எனும் பெயரில் செப்டம்பர் 2-ம் தேதி அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து காலை 11:50 மணிக்கு விண்கலன் அனுப்பப்படும்,” ISRO

இதுவரை நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியில் உலகின் எந்த நாடும் வெற்றி பெற்றதில்லை. ஆனால், இம்முயற்சியில் இந்தியா வெற்றி பெற்று உலக நாடுகளைத் தன்பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்வதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ மையத்தின் மூத்த விஞ்ஞானி கூறும்போது, “சூரியனை ஆய்வு செய்ய விண்கலனை அனுப்பும் முதல் முயற்சியாக ஆதித்யா எல் 1எனும் பெயரில் செப்டம்பர் 2-ம் தேதி அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து காலை 11:50 மணிக்கு விண்கலன் அனுப்பப்படும்,” என்று தெரிவித்தார்.

இத்திட்டத்தின் நோக்கப்படி, சூரியனில் உள்ள வாயு மண்டலம், சூரியனின் மத்திய பகுதியான கொரானாவின் வெப்பம், சூரிய வாயுவின் வேகம் மற்றும் தட்பவெப்ப மாறுதல்கள்குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். சூரிய மண்டலத்தில் லக்ரேஞ்சியன் புள்ளி என்ற இடத்தை அடைய முயற்சிப்பதே இதன் நோக்கங்களில் ஒன்று. இந்தத் திட்டத்திற்கு சுமார் ரூ.400 கோடிவரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல். ராக்கெட்டில் இந்த விண்கலன் சூரியனின் சுற்று வட்டப்பாதயை சென்று அடையும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனிலிருந்து அவ்வப்போது வெடி அதிர்வுகள் வெளிப்படும். இந்தியா விண்வெளியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதால் இந்த அதிர்வுகள்குறித்து முன்கூட்டியே அறிந்து கொண்டால், அதன்படி இஸ்ரோவின் ஆராய்ச்சிகளைச் சுலபமாகத் திட்டமிடலாம் என்பதால் இது மிகவும் அவசியமான முயற்சியென விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் இந்த ஆராய்ச்சி, அமெரிக்காவின் நாசா மையத்தின் முயற்சிகளுக்கும், ஐரோப்பிய விண்வெளி மையத்தின் முயற்சிகளுக்கும் ஈடாகக் கருதப்படுகிறது. ஆதித்யா எல் 1 திட்டத்தில் உலகில் எந்த நாடும் இதுவரை செய்யாத முயற்சியாகச் சூரியனின் வெளிப்புற மண்டலத்தை இதுவரை இல்லாத, குறைந்த தூரத்தில் கண்டு ஆராயவும், புற ஊதா நிற கதிர்வீச்சிற்கு இடையே ஊடுருவிச் சூரியனின் புகைப்படங்களை எடுக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *