World Record: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து 2 வயது குழந்தை!

கோவையைச் சேர்ந்த இரண்டு வயது கூட நிரம்பாத குழந்தை  தேசிய சின்னங்கள், நிறங்களின் பெயர்கள், எண்கள், உயிர் எழுத்துக்கள், ஆத்திசூடியெனத் தன் மழலை குரலில் கூறி  இந்திய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தீபன், மதுமதி ஆகிய தம்பதியரின் மகள் ஷிவானி.ஒரு வயது பத்து மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள ஷிவானி தன் மழலை குரலில் பேசிச் சாதனை படைத்து இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஷிவானி பதினோரு தேசிய சின்னங்களின் பெயர்களைக் கூறுவது, எட்டு நிறங்களின் பெயர்கள், ஒன்பது வகையான வடிவங்களின் பெயர்களைக் கூறுவது, ஆறு விதமான முக பாவனைகள், நான்கு நர்சரி பாடல்கள்,26 ஆங்கில எழுத்துக்களின்   சொற்களைக் கூறுவது, ஒன்று முதல் பத்து வரை எண்களைக் கூறுவது, உயிர் எழுத்துக்கள் மற்றும் ஆத்திசூடியென அனைத்தையும் தன் மழலை குரலில் பேசி ஷிவானி சாதனை புத்தகத்தி்ல் இடம் பிடித்துள்ளார்.

இரண்டு வயது கூட நிரம்பாத குழந்தை ஷிவானி செய்த  இந்தச் சாதனையைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *