YouTuber TTF Vasan Latest: சிறை வாழ்க்கை திருமண ஆசையை தூண்டுதாம்!

Advertisements

சிறை வாழ்க்கை தனக்கு திருமண ஆசையைத் தூண்டியதாகவும், 3 மாதம் லிவிங் டு கெதரிலிருந்து விட்டுத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் டிடிஎஃப் வாசன் கூறியுள்ளார்.

கோவையைச் சேர்ந்த யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசன் இருசக்கரத்தை ஓட்டித் தனிக்கெனத் தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். அதிக சிசி திறன் கொண்ட விலை உயர்ந்த வாகனங்களை ஓட்டியும், ரைடு செய்தும், வீலிங் செய்தும் இளைஞர்களைக் கவர்ந்த டிடிஎஃப் வாசன் பிரபலமாகவே லவம் வரத் தொடங்கினார். சினிமா நடிகரைப் போல் டிடிஎஃப் வாசனை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவருடன் இணைந்து செல்பி எடுப்பது, டிடிஎஃப் வாசனிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது என அலப்பறைகளை செய்து வந்தார்.

Advertisements

இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக, டிடிஎஃப் வாசனை கண்டித்தது. டிடிஎஃப் வாசனின் யூடியூப் தளத்தை முடக்க உத்தரவிட்டதுடன், அவரது இருசக்கர வாகனத்தைக் கொளுத்த வேண்டும் என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே டிடிஎஃப் வாசனின் வாகனம் ஓட்டும் உரிமத்தை 10 ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் அண்மையில் சிறையிலிருந்து டிடிஎஃப் வாசன் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின்ன சில நாட்கள் அமைதியாக இருந்த அவர், தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அப்போது பேசிய டிடிஎஃப் வாசன், 40 நாள் சிறை வாழ்க்கை எனக்குப் பல அனுபவத்தைத் தந்துள்ளது. எனக்குக் கல்யாண ஆசை வந்துவிட்டது. எனது கனவுக் கார் வாங்கிவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால், தற்போது அதுக்கு எல்லாம் முன்னாடி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்து விட்டேன்.

இப்போது திருமனம் செய்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். அதுவும் ஓடிப் போய்த் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன்னதாக 3 மாதம் லிவிங் டு கெதரில் இருக்க விரும்புகிறேன். ஏனென்றால் வாழக்கையில் நிறைய பார்த்துவிட்டேன். அதனால், லிவிங் டு கெதரில் இருக்க போகிறேன்” எனச் சர்ச்சையாகப் பேசியுள்ளார்.

அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, விபத்தை ஏற்படுத்துவது, சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை, தவறான முன்னுதாரணம் எனப் பல சர்ச்சைகளில் சிக்கிய டிடிஎஃப் வாசன் லிவிங் டு கெதரில் இருக்க போகிறேன் எனப் பேசி மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். டிடிஎஃப் வாசனை இளைஞர்கள் பலர் பின் தொடர்வதால் அவர் லிவிங் டு கெதரை ஆதரித்துப் பேசுவதால், இளைஞர்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்வதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *