Operation Ajay: இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்!

“ஆபரேஷன் அஜய்” மூலம் இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்!

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், “ஆபரேஷன் அஜய்” மூலம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது. Operation Ajay

“இஸ்ரேலிலிருந்து இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய் தொடங்கப்படுகிறது. அவர்களுக்காகச் சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள எங்கள் நாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலிலிருந்து இந்தியா செல்வதற்காகப் பதிவு செய்துள்ள இந்தியர்கள், நாளை முதல் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள நாட்டின் தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *