ஊழியர்கள் தமிழ் பேச கற்றுக் கொள்ள வேண்டும்!

Advertisements

ரெயில்வே துறையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பணிபுரிந்து வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களில் பெரும்பாலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் பணிபுரிகிறார்கள். இதனால் பயணிகள்- ஊழியர்கள் இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக முன்பதிவு செய்யும்போது ஏராளமான அந்தந்த மாநில மொழிகள் தெரியாத காரத்தினால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல், ரெயில் ஓட்டுனர்களிடையேயும் மொழி பிரச்சனையால் தகவல் தொடர்பு என்பது முழுமையானதாக இல்லாமல் இருக்கிறது. எனவே இந்தப் பிரச்னைகளைச் சரி செய்யத் தெற்கு ரயில்வே ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது.

அதாவது வட மாநில ஊழியர்களுக்கு அவர்கள் எந்த மாநிலத்தில் பணி செய்கிறார்களோ அந்த மாநிலத்தின் மொழியைச் சொல்லிக்கொடுப்பது எனத் தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. ரெயில்நிலையம் டிக்கெட் கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள், ரெயில் நிலையில் மற்றும் ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர், ஆர்பிஎஃப் வீரர்கள் இதன் மூலம் பயடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் “தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பணிபுரியும் பல ஊழியர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களால் உள்ளூர் மொழிகளில் பேச முடிவதில்லை. இதை உணர்ந்த தெற்கு ரெயில்வே, தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகிய மொழிகளில் பணிபுரியும் அறிவைப் பெறுவது அவசியம் கருதுகிறது. இதன் மூலம் மக்களுக்குச் சிறப்பான சேவை அளிக்க முடியும் என்று கருதுகிறது.

எனவே அனைத்து துறைகளின் தலைவர்கள், பணிமனைகள், ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர்களுக்குப் பிராந்திய மொழி கற்றலுக்கான பயிற்சித் தொகுதியை உருவாக்க அறிவுறுத்தப்படுகிறது. இவர்கள் அனைவரும் பயிற்சி திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *