cinema news:பெட்ரூம் சீனில் நடித்தபோது நெருடல்: மிருணாள் தாகூர் ஓபன் டாக்!

Advertisements

மும்பை: சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர். பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், துல்கர் சல்மானுடன் சேர்ந்து சீதா ராமம் தெலுங்கு படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படம் வெளியானதிலிருந்து மிருணாள் தாகூரை சீதா என்றே செல்லமாக ரசிகர்கள் அழைக்கிறார்கள். தற்போது மிருணாள் தாகூருக்கு தமிழ் பட வாய்ப்புகளும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது.

தென்னிந்திய படங்களில் அடக்கமாக நடித்த மிருணாள் தாகூர், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சியெனக் கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், நெருக்கமான காட்சியில் நடிப்பது தொடர்பாகப் பேசியுள்ளார். அதில் அவர், முத்த காட்சிகளில் நடிக்கும்போது எனக்கும் மிகவும் அசௌகரியமாகவும் நெருடலாகவும் இருக்கும். நான் சவுகரியமாக உணரவில்லை. என்னுடைய பெற்றோர்களும் அதை ஏற்று கொண்டதில்லை என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.

Mrunal Thakur

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *