என்னது இட்லிக்கடை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இல்லையா..?

Advertisements

தமிழ் சினிமாவில் இன்றைக்கு உள்ள இசையமைப்பாளர்களில் மிகவும் பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது, அனிருத் தான். காரணம் பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள், பெரிய நடிகர்களின் படங்கள் என அதில் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் என்ற பெயர் இயல்பாகவே சேர்ந்து விடுகிறது. அப்படியான அனிருத் கடந்த தனுஷ் உடன் இணைந்து படம் செய்வதில்லை என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இருவருக்கும் பிரச்னையா என்ற கேள்வியும் எழுகிறது.அனிருத் ஒரு சென்சேஷனல் இசையமைப்பாளர் என்ற சந்தேகம் யாருக்கும் இருக்காது. காரணம், அவர் தனது அறிமுகப் படமான 3 படத்தில் இடம்பெற்ற பாடலான ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு தேசிய விருது பெற்றார்.

தனுஷ் தற்போது படங்களை இயக்கியும் அதனை அவரே நடித்தும் வருகிறார். அந்த வகையில் தனுஷின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான பா. பாண்டி. ராயன் ,நிலவுக்கு என்மேல் என்னடி கோவம், அடுத்ததாக இட்லிக்கடை ஆகிய திரைபடங்களை அவரே இயக்கி இருந்தார் .
இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது . தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் மீண்டும் உருவாகி வெளியான படம் என்றால், அது திருச்சிற்றம்பலம். இந்த படத்திலும் பாடல்கள் செம ஹிட் அடித்தது. படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு தேசிய விருது கிடைத்தது.தனுஷ், நித்யா மேனன் கூட்டணியில் இட்லி கடை என்ற படம் உருவாகி தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இருவரும் இணைந்து படம் பண்ணாமல் இருப்பதற்கு காரணம், அனிருத் தற்போது செம பிஸியாக இருக்கிறார் என்பது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் அனிருத்தின் சம்பளம். அனிருத் ஒரு படத்திற்கு சுமார் 19 கோடிகள் வரை சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் அனிருத்தை கமிட் செய்வதில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்னை இருக்கிறது என கூறப்படுகிறது. அதனால்தான் தனுஷ் படத்தில் அனிருத்தை கமிட் செய்ய முடியாமல் போகிறதாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *