
கேரளாவில் நடிகர் விக்ரம் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, பாட்டு பாடிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கேரளம் மாநிலம் மூணாறு பகுதியில் தேயிலை தோட்டத்திற்கு வந்த பிரபல நடிகர் விக்ரம், அங்கு பணியாற்றி வந்த தோயிலை தோட்ட பெண் தொழிலாளர்களுடன் நகைச்சுவையாக பேசியும் பாடல்கள் பாடியும் மகிழ்ந்தார்.
இதன் பின்னர், விக்ரமை நேரில் கண்ட தொழிலாளர்கள் உற்சாகமடைந்து, அவரது படங்கள் குறித்து பேசிக் கொண்டதுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


