
நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை எடுத்துச் செல்லும் ரயில் பயணிகளிடம் கட்டணம் பெறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.கோடை விடுமுறையைக் கொண்டாட மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளுக்குக் குறிப்பிட்ட அளவை நிர்ணயம் செய்து ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி ரயில்களில் ஓரடுக்குக் குளிர்வசதிப் பெட்டியில் 70 கிலோ வரையிலும், ஈரடுக்குக் குளிர்வசதிப் பெட்டியில் 50 கிலோ வரையிலும், மூன்றடுக்குக் குளிர்வசதிப் பெட்டி, உறங்கும் வசதிப் பெட்டிகளில் செல்வோர் 40 கிலோ வரையிலும் கட்டணமின்றிச் சுமைகளை எடுத்துச் செல்லலாம். இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு ஒன்றரை மடங்குக் கட்டணம் பெறப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிலோவுக்கும், 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்’ என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கோடைகாலம் என்பதால் , பயணியர் கூடுதல் உடைமைகளை எடுத்துச் செல்கின்றனர்.ரயில் பயணியர், குறிப்பிட்ட அளவு மட்டுமே உடைமைகளை எடுத்து செல்ல வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், சமீப காலமாக, பயணியர் கூடுதல் உடைமைகளை எடுத்துச் செல்கின்றனர்.
