Vayalur Murugan Temple: முருகபெருமான் தனது வேலாயுதத்தால் உருவான தீர்த்த குளம்!

Advertisements

முருகபெருமான் தனது வேலாயுதத்தால் உருவான தீர்த்த குளம்!

வயலூர் முருகன் கோயில் என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் குமார வயலூர் என்ற ஊரில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சிவன், பார்வதி மகனான முருகப் பெருமானுக்கான ஒரு கோயிலாகும். ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் இக்கோயில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. கருவறையின் முதன்மை தெய்வம் சிவன் என்றாலும், இக்கோயில் முருகன் கோயிலாகப் புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் விளங்குகிறது.

வரலாறு:

இக்கோயிலை முற்கால சோழ மன்னனான ஆதித்த சோழனால் சோழர் கலைப்பாணியில் பரிவார தெய்வங்களுக்கான தனி சந்நிதிகளோடு கற்றளியான ஒரு சிவன் கோயிலாகக் கட்டப்பட்டது. இக்கோயில் இறைவன் வயலூர் திருகற்றளி பரமேசுவரர் என அழைக்கப்பட்டார். இந்த ஊருக்குப் பக்கத்து ஊரைச் சேர்ந்த சேந்தன்காரி என்ற பெண் இந்தக் கோயிலின் இறைவனுக்கு ஒரு இறைவியாக உமா தேவியின் செப்புச் படிமத்தைச் செய்து அளித்தாள். அந்த உமையை மன் மகளாகப் பாவித்து இறைவனுக்கு மணம் செய்துவித்தாள். இறைவிக்கு திருவமுது படைக்கத் தன் பிறந்தகத்தில் சீதனமாக வந்த வயலைத் தானமாக அளித்தாள்.


கோயில்:

பசுமையான வயல்களால் சூழப்பட்டுள்ள இக்கோயில் உய்யகொண்டான் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு பார்த்தவண்ணம் அமைந்துள்ளது. கோயில் இரு திருச்சுற்றுகளைக் கொண்டுள்ளது. மூலவரான சிவன் சந்நிதிக்கு பின்புறம் உள்ள முருகப் பெருமான் கோயிலின் முக்கிய தெய்வமாகக் கருதப்படுகிறார். இக்கோயிலில் உள்ள மற்ற சந்நிதிகள் மூலவர் ஆதிநாதர் (சிவன்). இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தம் சக்தி தீர்த்த குளம் என்றும் அழைக்கப்படுகிறது.

தொன்மத்தின் படி, முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் இந்தக் குளத்தை உருவாக்கினார் எனப்படுகிறது. இராசகோபுரத்தின் நுழைவாயிலிலிருந்து இடது புறத்தில் ததல மரமான வன்னி மரம் காணப்படுகிறது. இக்கோயிலுக்கு அமைக்கபட்டுள்ள ஐந்து நிலை இராசகோபுரம் அண்மைக் காலத்தில் கட்டபட்டதாகும். இத்தல சிவன் ஆதிநாதராகவும், அவரது துணைவியார் ஆதிநாயகியாகவும் உள்ளனர். முத்துக்குமாரசுவாமியின் திருவுருவம் கருவறைக்கு பின்புறம் முதல் பிராகாரத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு:

இறைவன் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றாக வயலூரைக் கருதுகின்றனர்.காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ அரசன் தனது தாகம் தணிக்க கண்ணில் பட்ட கரும்பொன்றை உடைத்து அதன் சாற்றினை அருந்த முற்படுகையில் அது மூன்று கிளைகளாக முறிந்து நின்ற அற்புதம் கண்டு வியப்புற்றான். மேலும் முறிந்த கரும்பிலிருந்து குருதியும் உதிரவே, அக்கரும்பு பயிரான வயலைத் தோண்டிப் பார்க்கையில், சிவலிங்கம் இருக்கக் கண்டான்.


கரும்பினைக் கண்ணுற்ற இடத்திலேயே அச்சிவலிங்கத்தை ஆகம விதிகளின்படி நிறுவிக் கோயில் ஒன்று எழுப்பினான். மூலவரான சிவன் ஆதிநாதர் எனவும், மூலவி ஆதி நாதி எனவும் வழங்கலாயினர். வயலிடை கண்ணுற்ற மூலவர் என்பதனால், வயலூர் என அவ்விடம் வழங்கப் பெறலாயிற்று.

விழாக்கள்:

கோவில் நாள்தோறும் ஆறுகால பூசை செய்யப்படுகிறது. காலை 6:00 மணிக்குக் காலசாந்தி பூசையும், 8:00 மணிக்கு முத்தால காலப் பூசையும், 12:00 மணிக்கு உச்சிக்காலப் பூசையும் முடிந்து மதியம் ஒரு மணிக்கு நடை சார்த்தபடுகிறது. மீண்டும் மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கபடுகிறது. மாலை 6:00 மணிக்குச் சாயரக்சை பூசையும், இரவு 8:00 மணிக்கு இரண்டாம் காலப் பூசையும். இரவு 9 மணிக்கு அர்த்தயாம பூசையும் செய்யப்படுகிறது.

திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர பூசை சடங்குகளும், பிரதோசம் போன்ற இருவார சடங்குகளும், அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி, சதுர்த்தி போன்ற மாதாந்திர சிறப்பு பூசைகளும் செய்யப்படுகின்றன. பதினோரு நாள் விழாவாகக் கொண்டாடப்படும் வைகாசி விசாகம் இங்கு முக்கிய வாழாவாகக் கொண்டாபட்டுகிறது. மேலும் இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களாகத் தைப்பூசம், பங்குனிஉத்திரம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, கந்தசஷ்டிஆகியவைதிருவிழாக்களாகும்.இக்கோயில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *