பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் : தமிழக அரசு அறிவிப்பு

Advertisements
பொங்கல் பரிசாக இந்த ஆண்டு வீட்டுக்கு வீடு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது . இதனை தீபாவளி என்று தமிழ்நாடு அரசு அறிவிக்கிறது . தமிழகத்தில் தீபாவளியும் பொங்கலும் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது .
இந்த ஆண்டு தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி பொங்கல் திருவிழா வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . இந்த நிலையில் தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி சுதந்திர நாளில் அறிவித்தார் அதன்படி ஜிஎஸ்டி வரி பாதி அளவில் குறைக்கப்படுகின்றன .
தமிழகம் முழுவதும் 2 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரொக்க பரிசாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு முதல் கட்டமாக ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியது பின்னர் ஆயிரம் ரூபாய் பரிசும் நிறுத்தப்பட்டது பதிலுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு  ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன .
இந்த நிலையில் வருகிற பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்க அரசு முடிவு எடுத்திருக்கிறது இதற்காக பத்தாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டு நிதி ஒதுக்கீடு சம்பந்தமான திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன  ஐந்தாயிரம் ரொக்க பரிசுடன் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை ஆகியவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்.
ரொக்கமாக கையில் ஐந்தாயிரம் ரூபாய் கிடைப்பதால் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா பட்டி தொட்டி எங்கும் கோலாலமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. பொங்கல் பரிசுக்கான இந்த அறிவிப்பை தீபாவளி தினத்தன்று முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *