
குளிர்காலத்தில் இனிப்புகளை உண்மையிலேயே அனுபவிக்க விரும்பினால், கேரட் ஹல்வாவை முயற்சிக்க மறக்காதீர்கள்.
2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நல்ல உருமாறும் வரை கிளறவும்.
முந்திரி, திராட்சை சேர்த்தல் ஒரு சிறிய பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, முந்திரி, திராட்சை பொரித்துக் கொள்ளவும்.
இதை அல்வாவில் சேர்த்து, ஏலக்காய் பொடியையும் தூவி கலக்கவும்.
இனிப்பு நறுமணம் வீசும் சுவையான கேரட் அல்வா தயார்! சூடாகப் பரிமாறலாம்.
இனிப்பு அதிகமாக வேண்டும் என்றால் சக்கரையை அதிகப்படுத்தலாம்.
முழுப்பாலுடன் செய்யும்போது அதிக நறுமணமாக இருக்கும்.
கேரட் அல்வா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கண் பார்வைக்கு நல்லது
கேரட்டில் நிறைய விட்டமின் A உள்ளது, இது ரெட்டினா சுகாதாரத்திற்கு உதவுகிறது.
கண்களின் ராத்திரி பார்வை மற்றும் ஒளிச்செறிவு மேம்பட உதவுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இதில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் C உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கேரட்:
கேரட்டில் இருக்கும் பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் தோலுக்கு உமிழ்வு, பொலிவை கொடுக்க உதவும். முரட்டுத் தோல் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைக் குறைக்கும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கேரட்டில் இருக்கும் பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும் கேரட்:
நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது கிட்னி, வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகளைச் சரி செய்ய உதவும்.
எலும்புகளுக்குப் பலம் சேர்க்கும். கேரட்டில் கால்சியம் மற்றும் விட்டமின் K உள்ளது, இது எலும்புகள் உறுதியடைய உதவுகிறது.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் கேரட்:
கேரட்டில் உள்ள இரும்புச்சத்து (Iron) மற்றும் ஃபோலேட் ரத்தத்தை சுத்தப்படுத்தி, அனிமியா குறைய உதவுகிறது. மனநிலை மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
