Karur : அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார் எடப்பாடி பழனிச்சாமி.!

கரூர் அரசு மருத்துவமனைக்குத் தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார்.
கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி

இன்று காலையில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்கும்படி மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டார்.

கரூர் துயரத்தை அறிந்த துணை முதலமைச்சர் உதயநிதி தனது வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியில் ரத்துச் செய்துவிட்டு உடனடியாகத் திருச்சிக்கு விமானத்தில் வந்துவிட்டார்.

அங்கிருந்து அவர் கரூருக்குக் காரில் புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *