Advertisements

படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் நோக்கம் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லா ல்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்” இன்று மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, சிறப்பு மலரை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், உலகளவிலான பல்கலைக்கழகங்கள் ஜே.என்.யு உடன் பணியாற்ற விரும்புகின்றனர் என்றும், படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் நோக்கம் என்றார்.
சாகித்ய அகாடமி விருது பெறுவோருக்கு வீடு வழங்க வேண்டும் என முடிவு செய்து கனவு இல்லம் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும், சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 கோடியில் வீடு வழங்கப்பட்டதாகவும், நூல் உரிமைத்தொகை இல்லாமல் கலைஞரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
Advertisements


