பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜூலை மாதம் முதல் வாரம் பிரேசில் செல்ல உள்ளார். 

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் முதல் வாரம் பிரேசில் செல்ல உள்ளார்.
பிரேசிலில் வரும் ஜூலை 06 மற்றும்  07-ம் தேதிகளில்  நடைபெற உள்ள பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இரு நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி பிரேசில் செல்ல உள்ளார்.
இதையடுத்து கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா என மேலும் 4 நாடுகளுக்கு மோடி அரசுமுறை பயணம்
மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *