
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியிருந்தனர். அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தன் சொத்து விவரங்கள் குறித்தான ஆவணங்கள் வழங்கியிருந்தார். அந்த விவரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூபாய் 20 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தன.
2021 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட சொத்து விவரன்களிலும் தற்போதைய சொத்து விவரங்களிலும் முரண் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை செய்யுமாறும் தேர்தல் அதிகாரி மற்றும் வருமான வரித்துறையினரிடம் வழக்கு போடப்பட்டது.திருவெல்லிக்கேணியை சேர்ந்த ஒருவர் இந்த வழக்கை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு எப்போது விசாரிக்கப்படும் என்பது குறித்து தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தேர்தல் முடிவிற்கு பிறகு அனைத்து வேட்பாளர்களின் சொத்து விவரங்களும் மீண்டும் சரிபார்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது… தேர்தல் முடிவிற்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் மீண்டும் சரிபார்க்கப்படும் என ஐ.டி அறிவித்து இருக்கின்றனர். எனவே துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை இதனை தெரிவித்து இருக்கின்றனர்.
தேர்தல் முடிவிற்கு பிறகு 150 நாட்களுக்குள் சொத்து மதிப்பை சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மே நான்காம் தேதிக்கு பிறகு அனைத்து வேட்பாளர்களின் சொத்து விவரங்களும் சரிபார்க்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட பிராமண பாத்திரத்தில் குறிப்பிடப்பட்ட சொத்து மதிப்பில் சர்ச்சை எழுந்தது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் குறிப்பிடப்பட்ட சொத்து விவரங்களுக்கும் இம்முறை அவர் வெளியிட்ட விவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண் இருப்பதாக வழக்கு போடப்பட்டது.




